இனவாதத்தை தூண்டுவதே விக்கியின் தேவை – ஜேவிபி குற்றச்சாட்டு
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலானோருக்கு தற்போது தேவையானது சமஷ்டி தீர்வல்ல. அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவசியமாக உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தினார்.
நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர். ஒற்றையாட்சி மூலமே அதிகாரப் பரவலாக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தி இருந்தார்.
நேற்று முன்தினம்(24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.