Breaking News

வடமாகாண முதலமைச்சரை கைது செய்ய நடவடிக்கை



வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘எழுக தமிழ்’ நிகழ்வானது அரச சொத்துக்களைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய வரலாற்றில் முதல் தடவையாக அரச சொத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் பிரிவனைவாதிகள் இவ்வாறானதொரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இனவாதத்தை தோற்றுவிக்க முயலும் விக்கினேஸ்வரன் போன்றோர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.