Breaking News

அரசியலமைப்புத் திருத்தம் மரணப் பொறி – என்கிறார் மகிந்த

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பிலிமத்தலாவ நகரில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசியலமைப்புத் திருத்தம் சமஸ்டி தமிழ் அரசு ஒன்றை உருவாக்கக் கூடும் என்பதால்,  பொதுமக்கள் இந்த முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.

இந்த நகர்வு குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் சமஸ்டித் திட்டங்கள் உள்ளன. பௌத்த மதத்துக்கான முக்கியத்துவமும் குறைக்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.