நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்; ஐ.நா.வில் ஜனாதிபதி -
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை உரையாற்றினர். இலங்கையில் தற்போது புதிய யுகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு கடந்த 20 மாதங்களில் அரசியல் பொருளாதார மீள் உருவாக்கம் தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்த சூழலை அகற்றி சுதந்திரமாகவும் ஜனநாயகத்துடனும் வாழும் சூழலுக்கான அடித்தளத்தை இந்த அரசாங்கம் அமைத்து கொடுத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் பிரதான நோக்கம் உலகில் மகிழ்ச்சியுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்குவதுடன் சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் சமூகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இதன்போது ஜனாதிபதி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
30 வருட காலமாக மிலேச்சத்தனமான பயங்கரவாத யுத்தத்தினால் முகங்கொடுத்த நாடு என்ற வகையில் பெற்று கொண்ட அனுபவங்கள் ஊடாக இலங்கையில் மீண்டும் ஒரு முறை யுத்தம் நிகழாமல் தடுப்பதற்கும் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் அரசு என்று ரீதயில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, இதற்கான ஆசிர்வாதத்தை பல நாடுகளில் இருந்து கௌரவத்துடன் எதிர்பார்ப்பதாகவும் ஜ.நா பேரவையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.