வீரவன்சவின் தாளத்திற்கு ஆடிய மகிந்த பாலசூரியவுக்கு மற்றுமொரு சிக்கல்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனத அரசியல் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த 8 பேருக்கு சட்டவிரோதமான முறையில் பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தமை தொடர்பாக விமல் வீரவன்சவுக்கும், பாதுகாப்பை வழங்க பரிந்துரைமைக்காக மகிந்த பாலசூரியவுக்கும் எதிராக இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை கடந்த ஆறு வருடங்களாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், அஞ்சான் உம்மா, வீரகுமார திஸாநாயக்க, நிமல் பிரேமவங்ச, பத்ம உதயசாந்த, தீபால் குணசேகர, ஜயந்த சமரவீர, சமன்சிறி ஹேரத் ஆகியோருக்கு தலா இரண்டு பொலிஸார் என 16 பொலிஸாரை பாதுகாப்புக்காக வழங்கியிருந்தாக கூறப்படுகிறது.
விமல் வீரவன்சவின் நேரடியான உத்தரவுக்கு அமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய இந்த பொலிஸாரை பாதுகாப்புக்கு வழங்கியுள்ளார்.
இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் , மகிந்த பாலசூரிய மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரிடம் விசாரணைகளை நடத்தவுள்ளது.