திலீபன் நினைவை மறந்து சம்பந்தன் புகழ்பாடிய மாகாணசபை உறுப்பினர்(காணொளி)
இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வை புறக்கணித்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மறுநாள் ஜனநாயகப் போராளிகள் ஒழுங்கு செய்திருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்கள் திலீபன் நினைவினை மறந்து அவரது தியாகத்தை பற்றி எதுவுமே பேசாது தற்போது தமிழ் மக்களின் ஒரே தலைவர் சம்பந்தன் ஐயா மட்டுமே தான் என்றும் சம்பந்தன் ஐயாவின் கைகளை பலப்படுத்துமாறும் திரும்பதிரும்ப கேட்டுக்கொண்டதோடு சுயநலத்திற்காக தலைவர்களாக வர சிலர் முயற்சிப்பதாக முதல்வரை சுட்டிக்காட்டியதோடு சம்பந்தன் ஐயா தீர்வை பெற்று தந்தபின்னர் ஏனையவர்களை தலைவர்கள் ஆகுமாறும் அறிவுரை கூறியிருந்தார்.
தொடர்புடைய முன்னைய காணொளி செய்தி
குறிப்பு- இந்த செய்தி தொடர்பில் தான் அவ்வாறு சொல்லவில்லை என மாகாணசபை உறுப்பினர் தகுந்த ஆதாரத்தை தந்தோ அல்லது இதற்கான மன்னிப்பை வாக்களித்த மக்களுக்கு தெரியப்படுத்தியால் அதனையும் வாசகர்களுக்கு அறியத்தர தமிழ்கிங்டொம் தயாராகவே உள்ளது என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்