கிளிநொச்சி இளைஞன் மீது பொலீசாரின் கொடுமை(படங்கள்)
இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள்
குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உழவு இயந்திரமொன்றைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) ஏ9 வீதியில் வைத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை விலக்குவதற்குச் சென்ற பொலிஸார், குறித்த இளைஞன் மீது கனத்த இரும்புச் சங்கிலியால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தவறு செய்திருந்தாலும் கூட இவ்வாறு முரட்டுத்தனமாக தாக்கியுள்ளமை பாரிய மனித உரிமை மீறலாகுமென தெரிவித்துள்ள பிரதேச கல்வியியலாளர்கள், எந்தவொரு அதிகாரியும் சட்டத்தினை கையில் எடுக்காதவாறு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்