பேராசிரியல் சிற்றம்பலத்தை பதவி விலகுமாறு கோரிக்கை
தற்போது தமிழரசுக்கட்சிக்க சிக்கலாக உள்ளவர்களில் ஒருவருமான பேராசிரியல் சிற்றம்பலம் அவர்களை பதவி விலகுமோறு கோரப்பட்டுள்ளதாக தமிழ்கிங்டொத்தின் ஆசிரிய பீடத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் அவரை பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மிக அண்மைக்காலமாக தமிழத் தேசியத்தின்பால் மிகுந்த கொள்கைப்பிடிப்போடும் சரியென்பதை நேரிடையாக மத்தியகுழுவில் விவாதிக்கும் வல்லமை உள்ளவர்களில் முதன்மையானவராக கருதப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலுக்காக சிபார்சு செய்யப்பட்டிருந்தவர் இருந்தும் அவரை உள்வாங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடகங்களுக்கு அவர் ஒத்துப்போக மாட்டார் என்பதனை புரிந்து திட்டமிட்டு அவருக்கான ஆசனம் வழங்கப்படவில்லை.
பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவையாகட்டும் பொது நிகழ்வுகளாகட்டும் கட்சி பேதங்களுக்கப்பால் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் தேசியத்தின்பால் நாட்டமுடையவராக காணப்பட்டுவந்தார். நாளை இடம்பெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டுவரும் இன்னிலையில் அவரை தொடர்புகொண்டு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
தொடர்புடைய காணொளி