Breaking News

தனியார் பல்கலைக்கழகம் நாட்டின் தேவை- உயர் கல்வி அமைச்சர்



சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் போன்று இன்னும் தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்கு அவசியம் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனத்துக்கு அங்கீகாரம் ஒன்று கிடைக்கும் பட்சத்தில், இன்னும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஐந்து நாட்டுக்குள் வருவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலபே சைட்டம் மருத்துவ பீடம் தொடர்பில் தற்பொழுது நாட்டில் எழுந்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அமைச்சரிடம் வியவியதற்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்த நாட்டு மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சென்று கல்வி கற்பதனால் வருடத்துக்கு 8000 அல்லது 9000 மில்லியன் நிதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கின்றன. தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக எந்தவகையிலும் இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படாது.

உள்நாட்டுக்கு எமது நாட்டு மாணவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்க முடியுமான ஒரு முறைமை காணப்படும் போது, எமது நாட்டு மாணவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல விடுவது அவசியமற்ற ஒன்று எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.