தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு விக்னேஷ்வரன் களம் அமைக்கிறார்- ஜே.வி.பி.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் விடுத்த இனவாத அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
அரசியல் ரீதியாக அவர் அடைந்துள்ள வங்குரோத்து நிலைதான் இந்த இனவாதத்தைத் தூண்டும் அறிவிப்புக்குக் காரணம் என அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
விக்னேஷ்வரனின் இனவாத தூண்டுதலினால், தெற்கிலுள்ள இனவாதிகளுக்கும் இனவாதத்தை தூண்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது எனவும் ரில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.