Breaking News

“எந்தத் தடை வந்தாலும் நல்லிணக்கத்தை அடைந்தே தீருவோம்” அரசாங்கம்





வடக்கிலும் தெற்கிலும் எவ்வாறான இனவாதம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் தேசிய நல்லிணக்கத்தை அடையும் பயணத்தை அரசாங்கம் கைவிடாது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடைந்தே தீரும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் ஆர்ப்பாட்ட பேரணியானது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாகவே உள்ளது. ஆனால் எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் எமது முயற்சியில் நாங்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கில் எழுக தமிழ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.