Breaking News

மீண்டும் அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவி கோரும் தொண்டமான்



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தனக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்குமாறு இரண்டாவது தடவையாகவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற வீதியிலுள்ள தனது வீட்டில் நடைபெற்ற விருந்து வைபவத்துக்கு வருகை தந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்று ஐ.ம.சு.மு. என்பவற்றின் செயலாளர்களிடம் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தான் தயார் எனவும், இவ்வாறு செயற்படுவதற்கு தனக்கு அரசாங்கத்தில் பிரபல அமைச்சுப் பதவியொன்று வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் பழனி திகாம்பரம் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தோட்ட மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளதாகவும், இதற்கு எதிராக முகம்கொடுக்க வேண்டுமாக இருந்தால் தனக்கு அமைச்சுப் பதவியொன்று அவசியம் எனவும் அவர் அரசாங்கத்திடம் கூறியுள்ளார்.