Breaking News

வெளியாகியது 'மின்பொறிக்குள் சம்பூர்' ஆவணப்படம்(காணொளி)

பல எதிர்பார்ப்புக்களுடன் இருந்த 'மின்பொறிக்குள் சம்பூர்' 
ஆவணப்படமானது வெளியாகியுள்ளது.

இன்று அனல் மின்நிலையம் கைவிடப்பட்டது என்ற ஒரு செய்தியை மட்டும் தான் அறிந்திருக்கின்றோம். ஆனால் இந்தியா வளைத்துப்போட நினைத்த சம்பூரின் 502 ஏக்கர் நிலமும், 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்படி பறவையும், மிருகமும், அப்பகுதி மக்களும் வாழ்வதற்கான வேலிகளற்ற சுதந்திர பகுதியாக இருந்ததோ, அப்படியே மீளளிக்கப்பட வேண்டும். வேறெந்த ஆதிக்க சக்தியினரின் அபகரிப்புக்குள்ளும் அந்த நிலம் சென்றுவிடக்கூடாது.

ஆனால் தமிழர்களை துரத்திக்கொண்டேயிருக்கும் துரதிஸ்டம் அதற்கான வாய்ப்புக்களைத்தான் அதிகம் வைத்திருக்கிறது. இதனைப் போராடிய மக்கள் நினைவில் வைத்துக்கெள்ள வேண்டும். என இவ் ஆவணப்படத்தை தயாரித்து வழங்கிய ஊடகவியலாளர் திரு ஜெரா தனது முகக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.