Breaking News

கோத்தபாய கடற்படை முகாமின் கொண்டாட்டம்: வட்டுவாகலில் நடத்த ஏற்பாடு!



முல்லைத்தீவு, வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமின் 7வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத்தெ ரியவருகின்றது.

வட்டுவாகல் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 469 ஏக்கர் காணிஉள்ளடங்கலாக மொத்தம் 617 ஏக்கர் நிலத்தில் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர்களும், இந்தப் பகுதியில் பரம்பரையாக மீன்பிடித் தொழில்மூலம் வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்திய குடும்பங்களும் வாழ வழியின்றித்தவிக்கும் நிலையில் குறித்த முகாமின் 7வது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.

இதன் ஆரம்ப நிகழ்வுக்காக நேற்று சுமார் 400 வரையான கடற்படையினர் முகாமுக்குசென்றுள்ளனர். அத்துடன் வீதியோரத்தில் மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் இறுதி நிகழ்வை எதிர்வரும் 14 ம் திகதி குறித்த முகாமில் பெரும்எடுப்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.