வரலாற்று மையத்தில் இனிதே இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு!(புகைப்படம்)
உலகின் முத்த குடிகளாகவும், மிகவும் முதன்மையான
மொழியைக் கொண்டவர்களாகவும், தனித்துவ அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இனமாகவும் வாழும் தமிழ் இனத்தின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராட்சியத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை வரலாற்று மைய வழாகத்தில் வரவேற்று அவர்களோடு கடந்தகால மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்திரையாடும் மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் (04-09-2016) நடைபெற்றது.
இந்த நிகழ்வு கலந்துரையாடலோடு மட்டும் நின்றுவிடாது, உணவு பரிமாற்றத்தோடு சிறுவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
குறிப்பாக தாயகத்தை நினைவூட்டும் முகமாக மரத்திலே கயிற்றில் கட்டப்பட்ட ஊஞ்சல், மற்றும் படகுச் சவாரி, அத்தோடு பறவைகள் மற்றும் சில விலங்குகள் காட்சியகம் என்பன அனைவரது கவனத்தையும் ஏற்றதோடு, வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்த நிகழ்விற்காக வரலாற்று மைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
நேறைய இந்த முக்கிய நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழ மற்றும் பிரித்தானிய தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டது.
பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றிவித்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை முன்னாள் திருமலை மாவட்டத் தளபதியும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுபினருமான மாவேரர் லெப். கேணல் புலேந்திரன் (புலேந்தி அம்மான்) அவர்களின் சகோதரர் திரு. வினோத் அவர்கள் ஏற்றிவைக்க, பிரித்தானியத் தேசியக் கொடியை Doris John ( The chief executive officer of Nations Without States) அவர்கள் ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவீரர் கடாபி அவர்களின் மனைவி மாவீரர் பொதுத்தூபிக்கான ஈகச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.