Breaking News

மத்திய அரசுக்கு வடக்கு முதல்வர் தடை! அரசு அதிருப்தி



வடக்கு மாகாணத்துக்கான முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்ததற்கு மத்திய அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

“அரசு எதைச் செய்தாலும் வடக்கு மாகாண முதல்வர் அதை விரும்புவதில்லை” என்று சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றில் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க. வடக்கு மாகாண முதல்வர் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

வடக்கு மாகாணசபை முன்னெடுக்கும் விடயங்களில் தலையிட நான் விரும்பவில்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கூறி 6 மில்லியன் ரூபா முதலீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக மத்திய அரசு ஏதாவது ஒன்றைச் செய்ய முயற்சித்தால் அதை வடக்கு மாகாண முதலமைச்சர் விரும்புவதில்லை.

அண்மையில், வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை. மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை அரசு செய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.