காணாமற்போனோர் பணியகம் இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல – மனோ கணேசன்
காணாமற்போனோர் தொடர்பான பணியகம், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகப் பயன்படுத்தப்படாது என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் விவகாரத்தினால், வடக்கில் உள்ள மக்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. நாட்டின் தென்பகுதியிலும், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.
காணாமற்போனவர்களின் விவகாரத்துக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே, காணாமற்போனோருக்கான பணியகத்தை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கவே, இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளதாக முத்திரை குத்த கூட்டு எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.
இது தவறானது. காணாமற்போனோர் பற்றிய விவகாரத்துக்குத் தீர்வு காணவே, இந்தப் பணியகம் உருவாக்கப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.