Breaking News

குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கவுள்ள பசில்!

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


திவிநெகும அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகிந்த அரசாங்கத்தின் போது திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் 30 மில்லியன் மோசடி தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.