அனுமன் பாலம் – இலங்கை மீதான இந்தியாவின் நேரடிப் படையெடுப்பு
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம், சிறிலங்கா மீது இந்தியா நேரடியான படையெடுப்பு நடத்த முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா- இந்தியா இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, அரசாங்கத்தில் உள்ளவர்கள் குழப்பமான தகவல்களை வெளியிடுகின்றனர்.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பாலம் அமைக்கப்படாது என்கிறார். அமைச்சர் கபீர் காசிம் இந்தோனேசிய மாநாட்டில், பாலம் அமைக்கப்படும் என்றார். ஆனால் நாடு திரும்பியதும் அவர் அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். இவர்கள் யாரை முட்டாளாக்க முனைகின்றனர்?
பாலம் அமைக்கப்படுவது சாத்தியம் என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வருகின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு இடங்களிலும் பல்வேறு முரண்பட்ட தகவல்களை வெளியிடுகிறது.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.