பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் இன்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (07) மற்றுமொரு விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மொஹன்லால்கிரேரு மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னரும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், இன்று இடம்பெறும் கலந்துரையாடலிலாவது பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அத்தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.