Breaking News

போராளிகளின் மர்ம மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள்: முன்னாள்ப் போராளி



முன்னாள்ப் போராளிகளின் மர்ம மரணத்தை வைத்து வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நடத்துவதாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும் ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான துளசி தெரிவித்திருந்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ அமெரிக்க மருத்துவ குழுவினர் முன்னாள்ப் போராளிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் எமக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள்ப் போராளிகளின் மர்ம மரணத்தை முன்னிலைப்படுத்தி தமது அரசியலைக் கொண்டு போகின்றனர். ஆகவே எமது போராளிகளின் மனக் கவலையைப் போக்குவதற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கின்றோம்’ என்று தெரிவித்திருந்தார்.