Breaking News

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் மரணம்



புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் மர்மக் காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பூநகரியை சேர்ந்த 53 வயதுடைய நடராஜா கலியுகராஜா என்ற முன்னாள் போராளியே காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந் நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் காய்ச்சல் காரணமாக அங்கிருந்து 27 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 7ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசரணை மேற்கொண்டுள்ளார்.

இவரது காச்சலின் வகை தொடர்பாகவோ அதன் தீவிர தன்மை தொடர்பாகவோ உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளைஇ புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் கடந்த ஜூலை மாதம் ஏழாம் திகதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்த மக்கள் கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்ட முன்னாள் போராளியொருவர்இ புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு சந்தேகத்திற்கு இடமான விச ஊசிகள் இராணுவத்தினரால் பலவந்தமாக ஏற்றப்பட்டதாக முறையிட்டார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா இராணுவமும் அரசாங்கமும் நிராகரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே நடராஜா கலியுகராஜா என்ற முன்னாள் போராளியின் மரணம் இடம்பெற்றுள்ளது.