Breaking News

மஹிந்தவிற்கு வயதாகி விட்டது..!!



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவு நன்மையை பெற்றுக்கொண்டதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்ரிய குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்தர்ப்பத்திலேயே இசுறு தேவப்ரிய இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை ஆட்சி செய்வதற்கு 12 வருடங்கள் மக்கள் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும், ராஜபக்ச குடும்பம் அவர்களது சுயரூபத்தை காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது அவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட மேல் மாகாண முதலமைச்சர், தற்போது வீதிகளில் இறங்குவதால் எதுவும் நடைபெறாது எனவும் சுட்டிக்காட்டினார்.