Breaking News

எஸ்.பி. யின் கருத்தை விமர்சித்த ராஜித



அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்தை விமர்சித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவிநெகும நிதியை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரும்பு குழாய்கள் வழங்கியமை தவறில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

எனினும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேர்தல் நோக்கம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை நிச்சயமாக நிதி மோசடியாகும் என தெரிவித்தார்.

குறித்த இரும்பு குழாய்களை பயன்படுத்தியவர்கள் தவறில்லை என தெரிவிக்கின்றனர். அனால் எனக்கு அது தவறு என சொல்லமுடியும், கரணம்,நான் அவற்றை பயன்படுத்தவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்