Breaking News

பிக்குகளை வணங்கிவரும் ஐயா...!!



இது ஒரே நாடு, இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதே சமயம் நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மாத்தறையில் இடம் பெற்ற பௌத்த வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மாத்தறை விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தில் பௌத்த வழிபாடுகளில் கலந்து கொண்டு பிக்குகளுக்கு மரியாதை செலுத்தினார்.இதன்போது போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், முதல் தடவையாக தெற்கிற்கு விஜயம் மேற்கொண்டதில் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன்.எதிர் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கு அவசியமானதை செய்ய வேண்டியது அவசியம், இதற்கான செயற்பாடுகளை நாடாளுமன்றத்தில் நான் செய்து வருகின்றேன் எனவும் இரா. சம்பந்தன் தெரித்தார்.

இதேவேளை, இரா. சம்பந்தன் தெற்கு விஜயத்தினை மேற்கொண்டது இதுவே முதல் தடவை என்பதும் அவர் மாத்தறையில் பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.