தில்ஷானின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி இன்று
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று(28) பகல் இரவு போட்டியாக தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இது திலகரத்ன தில்ஷான் இலங்கை அணிக்காக விளையாடும் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.
இதே வேளை , இன்று இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள திலகரத்ன தில்ஷானுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்கவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.