Breaking News

சுதந்திரக்கட்சிக்கெதிராக சமலின் அதிரடி முடிவு!



ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் , தொகுதி அமைப்பாளர் பதிவிகளிலிருந்து கட்சியின் உயர்மட்டக் குழுவினரால் கடந்த வாரம் அதிரடியாக பதவி நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில்

கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சியினை சேர்ந்த தொகுதி அமைப்பாளர்கள் சிலர் தாமாகவே அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு எடுத்து வச்துள்ளனர் . ஒருசில உறுப்பினர்கள் பதவி விலகியும் உள்ளனர்

அந்த வகையில் முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஸ திஸ்ஸமாராம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான இறுதி முடிவினை எதிர்வரும் நாட்களில் திஸ்ஸமாராமையில் நடைபெறும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துரையாடலின் போது தெரிவிக்கவுள்ளதாகவும் சமல் ராஜபக்ஸ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.