Breaking News

புதிய கட்சி உருவானதும் ஜனாதிபதி இரகசியங்களை வெளியிடட்டும்



புதிய கட்சி ஒன்று விரைவில் உருவாகும். அக்கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாகும். அது தொடர்பில் ஜனாதிபதியும் நாளாந்த செய்திதாள்களை வாசித்து அறிந்து கொள்வார். எனவே அது அந்தச் செய்தி வெளியானதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரிடத்தில் உள்ள எம்மை பற்றிய ரகசியங்களை வெளியிடட்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் லுனுகும்வெஹெர பிரதேச செயலாளர் காரியாலயத்தின் கேட்போர்கூடத்தில் "புதிய அரசியலமைப்பு மரணப்பொறி "என்ற தலைப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.