Breaking News

நெஞ்சை உலுக்கும் அலெப்போ சிறுவனின் கோலம்



சிரியா நாட்டு சிறுவன் ஒருவன் கொடுங்கோலர்களின் தாக்குதலை அடுத்து இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி ஹலப் பிரதேசத்தின் அவலத்தை உலகுக்கு கோடிட்டு காட்டிக் காட்டியுள்ளன.

கடந்த புதன்கிழமை மாலை ரஷ்யா போர் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து மீட்பு படை வீரர்கள், இம்ரான் தக்நீஷ் என்ற அந்த ஐந்து வயதுடைய சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வைத்தனர்.

தனது குடும்பத்தை இழந்த அந்த குழந்தை முகத்தில் இரத்தம் சொட்ட, தூசிகள் உடல் முழுவதிலும் படிந்த நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் அந்த காட்சி மனித நேயம் படைத்த அனைத்து உள்ளங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சிரியா அரச படைகள் மற்றும் ரஷ்யாவும் அரங்கேற்றும் கொடூர போர் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இதுவே முதல் சான்று அல்ல. ஏற்கனவே பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்களை மேற்கொண்டுள்ள அந்த அரக்கர்கள், தொடர்ந்தும் இரத்த வெறிப்பிடித்து அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இம்ரான் தக்நீஷ் மீட்கப்பட்டதை அடுத்து அதே இடிபாடுகளுக்கும் இருந்து நான்கு குழந்தைகள், ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.