கழிப்பறையை உணவறையாக மாற்றவேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை
நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தரப்பினரும் மஹிந்த தரப்பினரும் நடந்துக்கொண்டவிதம் குறித்து தமது நிலைப்பாட்டை அவர் இன்று வெளியிட்டார்
உண்மையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து தாமும் அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி தரப்பினர் அனைவரும் வெட்கப்படவேண்டும்.
இந்த சம்பவத்தை பல லட்சம்பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை தாம் கௌவர என்ற நிலையில் அழைப்பதால் அவர்கள் நாடாளுமன்ற ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என்று கரு ஜெயசூரிய கேட்டுக்கொண்டார்.
அரசியலில் போராட்டங்கள் தேவையென்றால், அதனை லிப்டன் சுற்றுவட்டம், கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக அல்லது ஹைட் பாக் கோனரில் வைத்துக்கொள்ளலாம்.
சிங்களத்தில் கூறுவதானால், கழிப்பறையை உணவறையாக மாற்றவேண்டாம் என்று கரு ஜெயசூரிய கேட்டுக்கொண்டார்.