Breaking News

பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மர்மநபர்!



ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜுடீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எஸ்.ஆர்.நாகமுல்லவினால் தடை ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை ராஜபக்சர்களுக்கு இரகசியமாக வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாகமுல்லவினால் ஏற்படுத்தப்படும் தடை தொடர்பிலான தகவல்களை இரசிய தன்மை கருதி வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகமுல்ல 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இறுதியில் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதைய காலப்பகுதியில் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஜோன் அமரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உதவியாளராக செயற்பட்ட சுதத் சந்திரசேகர என்பவரின் பரிந்துரைக்கமைய நாகமுல்ல இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதத் சந்திரசேகர என்பவர் முன்னாள் பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டுள்ளதுடன் நாகமுல்ல மற்றும் சந்திரசேகர ஆகிய இருவரும் ஒன்றாக பயிற்சி பெற்றவர்களாகும்.

ராஜபக்ச அரசாங்கத்தில் ஏற்பட்ட மோசடி தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்களுடன் சுதத் சந்திரசேகர ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து தனக்கு நெருக்கமான குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி நாகமுல்ல ஊடாக அதன் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதத் சந்திரசேகர பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் போன்று தன்னை காட்டிக் கொண்டு, உத்தியோகபூர்வ கடிதங்கள் உட்பட பலவற்றை வெளியிட்டு வருகிறார். எனினும் பிரதமருக்கு தனிப்பட்ட செயலாளர் என ஒருவரும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கே.பீ.தயாரத்ன மற்றும் சென்ரா பெரேரா என்ற இருவருமே பிரதமரின் விசேட உதவியாளர் என்ற பதவியில் செயற்படுகின்றனர்.

தயாரத்ன மற்றும் சென்ரா ஆகிய இருவரும் அலரி மாளிகையில் கடமையில் ஈடுபடுகின்ற போதிலும் சுதத் சந்ரசேகர ஒப்பந்தங்கள் மேற்கொள்வதனால் பிரதமர் அவரை அலரி மாளிகையில் இருந்து துரத்தியுள்ளார்.

சுதத் சிறிகொதவில் மாத்திரம் செயற்படுகின்ற நிலையில், பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் என தன்னை அடையாளப்படுத்தி, அமைச்சர்களை உட்பட பலரை ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் பொலிஸ்மா அதிபர் இது தொடர்பில் விசாரணை நடத்தினால், சுதத் மற்றும் நாகமுல்ல இணைந்து லசந்த மற்றும் தாஜுடீன் கொலை விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதனை அறிந்து கொள்ள முடியும்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.