Breaking News

மகிந்தவை வீழ்த்த மைத்திரி வியூகம்!

எதிர்வரும் தேர்தல்களின் போது, மஹிந்த தலைமையிலான குழுவினரை தோல்வி அடையச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்று வழியொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட மேலும் பல கட்சியை இணைத்து வலுவான முன்னணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் மைத்திரி தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னணிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்துக் கொள்வது கடினமான ஒரு விடயமல்ல எனவும் இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் தரப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் முன்னணிக்கு இணக்கம் வெளியிடவில்லை. என்றாலும் சஜித் தரப்பினால் அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டின் போது வெளிப்படுத்தவுள்ளதாக மைத்திரி தனது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சர்களின் தலைமைத்துவத்தில் ஏற்படும் அரசியல் அமைப்புகளுக்கு முகம் கொடுப்பதற்கு இந்த முறையிலான முன்னணி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய தேசிய அரசாங்கம் எந்த முறையிலும் வீழ்ச்சியடையாத வகையில் எதிர்வரும் வருடங்கள் பயணிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.