Breaking News

பிரபாகரன் விடயத்தில் விக்கிலீக்ஸ் இன் மர்மம்!



வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!” என ச.தமிழ்மாறன் தெரிவித்திருந்தமை நாம் அறிந்ததே.

இதனைப்போல, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த சாட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது நூறு வீதம் உண்மை என முன்னாள் போராளியும், அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அப்படியானால் இலங்கை இராணுவத்தின் கையில் பிரபாகரன் சிக்கி கொல்லப்பட்டமை உண்மையா?, அல்லது சர்ச்சையா? என கேள்வி எழும்பியுள்ளது.

விக்கில்ஸ் தகவலின் படி, கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

mதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையென்றால், அவரது முழு குடும்பமும் உயிருடன் இருக்க வேண்டும். மாறாக பிரபாகரனின் உறவுகள் கொல்லப்பட்டது என கொல்லப்பட்ட அவரது உறவுகள் உண்மையில் அவரது உறவாக இருக்க முடியாது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில், மே மாதம் 18-ந்தேதி நடந்த சண்டையில் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடலையும் சிங்கள வீரர்கள் முள்ளி வாய்க்காலில் இருந்து எடுத்து வந்து காண்பித்தனர்.

விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் வேலை செய்த கருணாவும், அந்த உடலை பார்த்து விட்டு, “அது பிரபாகரன் உடல்தான்” என்றார். ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவுத்தலைவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தொடக்கம் முதலே உறுதியாக தெரிய வந்தது. சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கலாம் என்று கூறினார்கள். பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் ஒன்றை தற்காலிகமாக தயாரித்துக் கொடுத்த சிங்கள அதிகாரிகளால், பொட்டு அம்மான் விஷயத்தில் அப்படி ஒரு தற்காலிக சான்றிதழைக் கூட கொடுக்க இயலவில்லை.

இந்திய உளவு அமைப்பான ராவும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச போலீஸ், பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளது.

இவ்வாறாக பார்க்கின்ற பொழுது இணையத்தளங்கள், அரசியல்வாதிகள், எதிர் நாடுகள் கூறுகின்ற கருத்தை விட விக்கில்ஸ் கூறிய கருத்துக்களில் ஓரளவு நம்பகத்தன்மை உள்ளது எனபது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விக்கில்ஸ் இன் சர்ச்சையான கருத்தினை நம்பி தமிழ் மக்கள் இன்னும் எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள் என்பதே நிஜம்.

ஆகவே விக்கில்ஸ் கூறிய கருத்து உண்மையா? அல்லது சர்ச்சையா? அல்லது மர்மமா என்பது விரைவில் தெரியவரலாம்…….