மஹிந்த ராஜபக்ஷ 65 குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்
குருணாகலையில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது நிறைவு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியும், அக்கட்சியின் போஷகருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, அகுருகாரமுல்ல பிரதேச விகாரையொன்று விஜயம் செய்த போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபடவுள்ளதனால் அதில் கலந்துகொள்ள முடியாமல் போகின்றது. வெளிநாட்டு விஜயம் தனக்கு கிடைத்த ஒரு அழைப்பாகும். எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் அந்த விஜயம் அமையவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும், தொகுதி அமைப்பாளர்களும் அவர்களது தொகுதி மக்களிடம் கலந்துரையாடியதன் பின்னர், அம்மக்களின் தீர்மானத்துக்கு ஏற்ப, கலந்துகொள்வது குறித்து தீர்மானம் எடுப்பார்கள்.
புதிய கட்சியை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது எனவும், கட்சியிலிருந்து வெளியேற்றினாலேயே கட்சியை உருவாக்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.