சோரம் போகும் தலைமைகளை வெளிச்சம்போட்ட நேரு(காணொளி)
கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல தமிழ்த்
தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈழச்செயற்பாட்டாளர்களின் முதன்மையானவரும் அரசியல் விமர்சகருமான நேரு குணரட்னம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
வடகிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்காக 350 கோடி ரூபா ஒதுக்கிய மைத்திரிபால சிறிசேன அரசு மகாவலி அபிவிருத்திதிட்டத்திற்கு 6000கோடிரூபா ஒதுக்கியுள்ளதோடு வஜம்ப அபிவிருத்தி திட்ட வேலைக்காக மேலும் 2000கோடி ரூபா நிதியும் இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டும் கலாநிதி நேரு குணரட்ணம் அவர்கள் மகிந்த ஆட்சி காலத்தில் 15ஆயிரம் கோடியாகவிருந்த பாதுகாப்பு செலவீனம் 2016ஆம் ஆண்டு அதன் இருமடங்காக 31ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது என்றும் சிங்களத் தலைவர்கள் தங்கள் மக்களுக்காக பெருமளவான உதவிகளை செய்துவருகின்றனர் என்றும் அதுபோல தமிழர்களுக்கான உதவியினை தமிழ்த்தலைமைகள் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் பல குற்றச்சாட்டுக்களையும் பல கேள்விகளையும் தமிழ்த் தலைமைகளின்மீது எழுப்பியுள்ளார்.
மேலும் வடக்கில் இராணுவத்தினர் தவிர 40ஆயிரம் வரையான ஊர்காவல்படையினர் நிலைகொண்டிருப்பதோடு வடக்கிலுள்ள குறிப்பாக முல்லைத்தீவு,கிளிநொச்சி,மன்னாரில் உள்ள சகல முன்பள்ளிகளும் அவர்களது கட்டுப்பாட்டில் இடம்பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இத்தகைய ஒரு வரவுசெலவுதிட்டத்திற்கு முதன்முறையாக த.தே.கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது இங்கு நோக்கத்தக்கது.
மேலும் இத்தகைய ஒரு வரவுசெலவுதிட்டத்திற்கு முதன்முறையாக த.தே.கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது இங்கு நோக்கத்தக்கது.
முக்கியமான செய்திகளை முகநூலில் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்