Breaking News

கிழக்கில் 64 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த தீர்மானம்!



கிழக்கு மாகாணத்தில் உள்ள 64 இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 162 இராணுவ முகாம்கள் இருந்தன. அவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் 98 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள 64 இராணுவ முகாம்கள் 33 ஆக குறைக்கப்பட உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் 69 இராணுவ முகாம்கள் 40 ஆக குறைக்கப்பட உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 31 இராணுவ முகாம்கள் 27 ஆக குறைக்கப்பட உள்ளது. இவ்வாறு அப்புறப்படுத்தப்பட உள்ள 64 இராணுவ முகாம்களில் இதுவரை 30 முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

100 படையினருக்கும் குறைவாக உள்ள பல இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கும் நோக்கில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தி, காணிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.