பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் கடமைக்கு
ஏற்றுக் கொள்ள முடியுமான ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் உடன்பாட்டுக்கு வந்ததனால், இன்று முதல் கடமைகளுக்குத் திரும்புவதற்கு பல்லைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 13 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரான உடன்படிக்கையினையடுத்து இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் எவருக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் இப்பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.