கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த நடைபவனி மாத்தறையிலிருந்து கொழும்புக்கு
அரசாங்கத்தின் மக்கள் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்ட நடைபவனியின் அடுத்த கட்டம், மாத்தறை யிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்ப டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு முதல் மாத்தறை வரை கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.