Breaking News

பஷில் பிணையில் விடுதலை



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று(திங்கட்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் குறித்த உத்தரவு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.