தென்கொரிய யானைக்கு “ கொரிலங்கா” என பெயர் சூட்டினார் மஹிந்த
கொரியாவிலுள்ள இலங்கை யானைக்கு கிடைத்த குட்டிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “கொரிலங்கா” என பெயர் சூட்டியுள்ளார்.
தென்கொரியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அரசாங்க காலத்தில் அந்நாட்டுக்கு பரிசாக வழங்கிய இலங்கை யானைக்கு கிடைத்த குட்டிக்கே உத்தியோகபுர்வமாக இவ்வாறு பெயர் சூட்டியுள்ளார்.