Breaking News

தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­துங்கள் - சுவாமிநாதன் கோரிக்கை



நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை யில் தடுத்துவைக்கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடுதலை செய்யும் பொருட்டு அவர் கள் மீதான வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சட்­டமா அதி­ப­ரி­டத்தில் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி ஒருநாள் அடை­யாள உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை ஈடு­பட்­டி­ருந்த நிலையில் அமைச்சர் சுவா­மி­நாதன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­திற்கும் இட­மில்லை. அர­சியல் கைதி­களின் விடு­த­லையை துரி­தப்­ப­டுத்தும் முக­மாக நீதி அமைச்­ச­ரு­ட­னான கலந்­துi­ரா­ய­டலின் பிர­காரம் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பல கைதி­களின் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள போதும் அவர்­களின் மீது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­ப­டாத நிலை­மை­களே காணப்­பட்­டி­ருந்­தன. தற்­போது அந்த நிலை­மை­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அண்­மையில் சட்­டமா அதி­ப­ருடன் நான் இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக நீண்­ட­நேரம் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டி­ருந்தேன். கடந்த காலத்தில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் கால­த­ம­தங்கள் காணப்­பட்­டி­ருக்­கின்­ற­மையை அவ­ரி­டத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

அதன்­போது சட்­டமா அதிபர், 90 பேருக்கு அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்­களின் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அத்­தோடு 50பேர் வரை­யி­லா­ன­வர்கள் விடு­விக்­கப்­பட்­டள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டினார். ஆகவே கடந்த காலத்தில் இருந்த நிலை­மை­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை மறுக்க முடி­யாது. ஆனாலும் சில தாமங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அவற்­றையும் போக்கி சிறை­களில் வாடும் தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும். சில சக்திகள் இந்த பிரச்சினையை பூதாகரமாக்கி அரசியல் சுயலாபம் பெற்றுக்கொள்ளவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறானவர்களின் இலக்குகளுக்குள் தமிழ் அரசியல் கைதிகள் சிக்கக்கூடாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றார்.