Breaking News

விஷ ஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளை கைவிட்டதா அமெரிக்கா?

விஷ ஊசி விவகாரம் தொடர்பாக பரிசோதனை செய்வதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பின்வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.


முன்னாள் போராளிகள் 14 பேர் வரை விஷ ஊசி பரிசோதனைக்கு வடக்கு முதலமைச்சரின் செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் பரிசோதனை செய்வதற்குரிய உபகரணங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து விஷ ஊசி பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்படுவோருக்கான பரிசோதனைகள் உள்ளுர் வைத்தியர்களின் ஊடாக மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய கிடைக்கின்றது.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்தித்த போது, விஷ ஊசியை பரிசோதனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.