Breaking News

மஹிந்த வழியில் ஜோதிடத்தின் பின்னால் ஓடும் மைத்திரி



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தின் மீதான தீவிர பற்றால் இன்று ஆட்சியை இழந்தார். தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோதிடத்தின் பின்னால் ஓடுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு யாத்திரை சென்றுள்ளனர்.

திருப்பதி சென்ற ஜனாதிபதி உட்பட குடும்பத்தினர் அங்கு நிர்க்கதியானதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி உட்பட குடும்பத்தினரை திருப்பதிக்கு அழைத்து சென்ற சாரதி உட்பட பாதுகாப்பு தரப்பினர் வெளியே நின்றதால், சுமார் 12 நிமிடங்கள் வரையில் ஜனாதிபதி உட்பட குடும்பத்தினர் பாதுகாப்பற்ற நிலையில் தனித்து விடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை ஜனாதிபதியின் உட்பட குடும்பத்தினர் திருப்பதியில் நிர்க்கதியானதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.