புனர்வாழ்வுப் பெற்ற 107 முன்னாள் போராளிகள் மர்ம மரணம்: சிவசக்தி ஆனந்தன்
தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யபட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் இளம் வயதான 107 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொற்றா நோயான புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட கால கட்டத்தில் ஊசி மருந்து ஏற்பட்டதாகவும் இதன் பின்னரே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான எந்தகாரணமும் இல்லை என குறிப்பிட்ட அவர், புகைத்தலோ மருந்தும் பழக்கமோ அற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பில் இருந்தவர்களுக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படும் ஊசி தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்துடன் கூடிய நியமிக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்