இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைப்பது குறித்து இந்தியா கருத்து
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கும் எந்தவொரு திட்டமும் இந்தியாவிடம் இல்லையெனெ இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கனேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்த போதே இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.