Breaking News

வட மாகாண அபிவிருத்திக்கு முதலீட்டு மாநாடு 22 ஆம் திகதி



வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்காகக் கொண்டு முதலீட்டு மாநாடொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 22 ஆம் திகதி அந்த மாநாட்டை நடாத்துவதற்கு யாழ். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தொடர்பில் இணைப்புக் காரியாலமொன்று யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படும் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.