Breaking News

ஊசி விவகாரம்: இங்குதான் பரிசோதனை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு, உள்நாட்டு வைத்தியர்களின் ஊடாக வைத்திய பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களால் முடியாவிட்டால் வெளிநாட்டுக்குச் சொல்வோம்' என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். 

முன்னாள் போராளிகள் பல் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மர்மான முறையில் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது என வட மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) தீர்மானிக்கப்பட்டது. 

இது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார். 'முன்னாள் போராளிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இது அந்த மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படும்' என்றார். 'வெளிநாட்டிலிருந்து விசேட வைத்திய நிபுணர்களை கொண்டு வந்து இந்த பரிசோதனை செய்வீர்களா?' என்று ஊடகவியலாளர் கேட்டபோது, ஏன் உள்நாட்டில் தான் சிறந்த வைத்தியர்கள் உள்ளனரே, முதலில் அவர்கள் பரிசோதனை செய்யட்டும். முடியாவிட்டால் பிறகு வெளிநாட்டுக்கு சொல்லுவோம்' என்றார்.