இண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள ரூ.20 கோடியா?
தல அஜித் நடிக்கும் ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பல வெற்றி படங்களை வெளியிட்ட முன்னணி நிறுவனம் ஒன்று ‘தல 57’ படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.20 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகை ரஜினி படங்களை தவிர்த்து பார்த்தால் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள படம் என்ற பெருமையை பெறுகிறது. இதற்கு முன்னர் ரஜினியின் ‘கபாலி’ ரூ.34 கோடிக்கும், லிங்கா’ ரூ.27 கோடிக்கும், ‘எந்திரன்’ ரூ.23 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.