பிரான்ஸ்: மதுபான விடுதியில் தீ விபத்து - 13 பேர் பலி
பிரான்ஸ் நாட்டின் ரென்னெஸ் நகரில் மதுபான விடுதியில் இன்று நிகழ்ந்த தீவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் தலைநகரான ரென்னெஸ் நகரின் ரோவென் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஸேனியூவே தெரிவித்துள்ளார்.