விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்!
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சருமான ருவான் விஜயவர்த்தனவை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் இரவு (05) கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய ஐக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.என். சுஹைர், ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி, உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர்:
இந்த நாட்டில் பயங்கரவாத சக்திகலோ அல்லது விடுதலைப்புலிகளோ மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் இந்த நாட்டில் வாழ்ந்த சகல சமுககங்களும் உயிர், உடமைகளை இழந்து துன்பப்பட்டனர்.
காத்தான்குடி, வெள்ளவத்தை சென் ஆண் கிறுஸ்துவப் பள்ளி, போன்ற மத ஸ்தானங்களின் நடத்திய புலிகள் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களையும் இராஜாங்க அமைச்சர் இதன்போது நினைவு படுத்தினார்.
மத ரீதியாக வெவ்வேறு சக்திகள் வந்து இந்த நாட்டில் பயிற்சியோ அல்லது இங்கு நிலைகொள்ளவது தொடர்பில் எமது பாதுகாப்பு படைகள் அவதானத்துடன் இருக்கிறது. ஆகவே மதத் தலைவர்கள் இது தொடர்பில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு, பாதுகாப்புப்பிரிவோடு தொடர்புடன் இருத்தல் அவசியம்.
நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. இவர்களது ஆட்சியில் இந்த நாட்டில் பிறந்த சகலருக்கும் சகல உரிமைகளையும் அனுபவிக்க உரிமை உண்டு. அதேபோன்று சட்டம், ஓழுங்கு சகலருக்கு சமம்.
அத்துடன் நாம் தற்காலிகமாக சமதானாத்தைப் பெற்றாலும் இன்னும் வட கிழக்கில் நல்லிணக்கம் ஏற்படவில்லை. அதனை ஏற்படுத்தி முழுமையாக நம் நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தி சகல சமுகங்களும் ஒரே கொடியின் கீழ் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ்வதற்கு நாம் வழிவகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.